Sunday, November 4, 2012

வங்கதேசம் அருகே கடலில் படகு மூழ்கியது : 130 அகதிகள் கதி என்ன?




 வங்கதேசம் அருகே கடலில் படகு மூழ்கியது. அதில் பயணித்த 130 அகதிகள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மியான்மர் நாட்டின் ராகின் மாநிலத்தில் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக் கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. அவ்வப்போது வெடிக்கும் இனக்கலவரத்தால் ஏராளமான முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாக செல்கின்றனர். கடந்த 10 நாட்களாக மியான்மரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு உள்ளது. இதில் 80க்கும் அதிகமானோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தில் தங்கியிருந்த மியான்மர் அகதிகள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக படகில் மலேசியா புறப்பட்டனர். 70 பேர் செல்லக் கூடிய படகில் 136 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த படகு, வங்கதேசம்  மியான்மர் எல்லை அருகே கடந்த திங்கள்கிழமை இரவு சென்றபோது பாறையில் மோதி கவிழ்ந் தது. இதில் 6 பேர் மட்டும் தப்பினர். அவர்களை வங்கதேச மீனவர்கள் மீட்டனர். அவர்களிடம் போலீ சார் விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. படகில் பயணித்த 130 பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.