Sunday, June 5, 2011

கவர்னர் உரை அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

கவர்னர் உரை அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


கவர்னர் உரை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.


தமிழக கவர்னர் உரை குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின்போது அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். 

ஆனால், அந்த 2 உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பு கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் கவர்னர் உரை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment