Wednesday, December 8, 2010

தமிழர் சமு தாய இழிவு ஒழிப்பு மாநாடு


 டிசம்பர் 8,9 நாள் கள் கழக வரலாற்றில் மட்டு மல்ல, மனித குல வரலாற் றிலேயே கூட மறக்கப்பட முடியாதவையாகும்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால், தமது வாழ்நாளில் இறுதியாக நடத்தப்பட்ட மாநாடு இந்நாள்களில்தான் நடைபெற்றது.
அதற்கு - தமிழர் சமு தாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று பெயர் சூட்டினார்.
அம்மாநாட்டில் 5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடியவை.
மனித சமத்துவத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பை வலியுறுத்தும் ஆணி வேர் போன்ற தீர்மானங்கள் அவை.
இந்திய அரசியல் சட்டத்தில் 372 ஆவது விதி இந்துலாவை அங்கீகரிப்ப தோடு, மதச் சுதந்திர உரிமை என்னும் பேரால், அரசியல் சட்டத்தில் உள்ள 25, 26 ஆவது ஷரத்துகளைக் காட்டி, சுப்ரீம் கோர்ட் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகமுடியாது என்றும், மதவிஷயங்களில் அரசு தலையிட்டு சாதி ஒழிப்புப் போன்ற சீர்திருத்தங்களைச் செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டி யிருப்பது - பார்ப்பனரல்லாத சூத்திர மக்களாகிய நம் மக்களின் இழிவினை என் றென்றும் நிலை நிறுத்தும் தன்மையில் இருப்பதால், அதனை மாற்றி நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்கவேண்டும் என்று கூறிவிட்டு, அதற்கான செயல் முறைகளையும் அம்மாநாடு தீர்மானத்தின் வாயிலாகவே வெளியிட்டது.
சாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்; சாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும்; இதனை வெறும் மன மாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி, காலங்கடத்தாமல், தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித் தாலும் அது சட்ட விரோதம் என்று அரசி யல் சட்டத்தின் 17 ஆவது பிரிவு கூறுகிறதே, அவ் விதியில் உள்ள தீண்டாமை (“untouchability”) என்பதற்குப் பதிலாக சாதி (“Caste”) என்ற சொல்லை மாற்றி சாதி ஒழிப்பை - அரசியல் சட் டமே பிரகடனப்படுத்து வதாக அமைய வேண் டும் என்று தீர்மானம் கூறுகிறது.
1957 நவம்பர் 26 ஆம் தேதியன்று தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப் பட்டு, நடத்தப்பட்டதே சட்ட எரிப்புப் போராட்டம் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் கலந்து கொண்டனரே - மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அனுபவித் தனரே - அந்தப் போராட்டத் தில் எரிக்கப்பட்ட அரசமைப் புச் சட்டப் பிரிவு என்பது இதுதான். (372 ஆவதுவிதி, இந்து லாவை அங்கீகரிக் கும் 25, 26 ஆவது பிரிவு களாகும்.)
இன்றுவரை - 37 ஆண்டு களாகியும் இந்திய அரசு இந்தப் பிரச்சினையின் பக்கம் தலை வைத்துப் படுக்க வில்லை என்பது எத்தகைய கொடுமை!
சுதந்திர நாட்டில் உள்ள அரசு அமைப்புச் சட்டத்தில் ஜாதி பாதுகாக்கப் பட்டால், அந்த நாட்டில் உண்மை சுதந்திரம் இருக்குமா? என்று தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இன்று வரை எந்தவிதப் பதி லும் இல்லை. ஆனாலும் இது சுதந்திர நாடுதான் என்று நம்ப வேண்டும். அப்படித்தானே?
- மயிலாடன்

No comments:

Post a Comment